வீடு இல்லாதவர்களை அரவணைக்கும் 20 பாதுகாப்பான உறங்கும் இடங்கள்.!

Safe Sound Sleeping Places
Pic: Giving.sg

சிங்கப்பூரில் வீடு இல்லாதவர்கள் இரவில் உறங்குவதற்கு வசதியாக Safe Sound Sleeping Places (S3Ps) என்னும் 20 பாதுகாப்பான உறங்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) கூறியுள்ளார்.

வீடு இல்லாதவர்கள் இரவில் உறங்குவதற்கு பயன்படும் அந்த இடங்கள் சமூக அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு மே இறுதி வரை அந்த இடங்கள் 93 விழுக்காடு நிரம்பியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

மெக்டொனால்டு கடை ஊழியரிடம் மோசமாக நடந்துகொண்ட வாடிக்கையாளர்!

குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சினை, வருமான இழப்பு, விவாகரத்து ஆகிய காரணங்களால் தங்குமிடத்தை இழந்தவர்கள், அந்தப் பாதுகாப்பான உறங்கும் இடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

கிருமித்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாதவர்களும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்றும், சமூகப் பணியாளர்கள், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பாதுகாப்பான உறங்கும் இடங்கள் குறித்து அல்ஜூனிட் குழுத்தொகுதி் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லியோன் பெரேரா (Leon Perera) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி எழுத்துபூர்வ பதிலை அளித்தார்.

வெளிநாட்டினருக்கு நற்செய்தி: செப்டம்பரில் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம்..!