கொட்டும் மழையில் பயணிகளுக்கு குடை பிடிக்கும் 72 வயதான ஓட்டுநர் – குவியும் பாராட்டு..!

SBS bus driver passengers umbrella
(Photo: Facebook / SBS Transit)

சிங்கப்பூரில் SBS பேருந்து ஓட்டுநர் (Bus 273) கொட்டும் மழையில் பயணிகளுக்கு குடை பிடித்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் வெகுவாக பெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டையும் நன்றியையும் பெற்ற அது தொடர்பான காணொளி கடந்த அக்., 7ஆம் தேதி இரவு 7 மணியளவில் Telok Blangah Heights வழியாக எடுக்கப்பட்டது என்று Stomp குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வெளிநாட்டவருக்கு 4 வாரச் சிறை..!

இதில் அந்த SBS பேருந்து ஓட்டுநர், 72 வயதான ஹோ சூ ஹியோங் (Hoe Soo Hiong) என அடையாளம் காணப்பட்டது.

மேலும் அவர் கடந்த 45 ஆண்டுகளாகப் பேருந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

45 ஆண்டுகளாக பணிபுரியும் ஹோ, மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் பயணிகளின் இதுபோன்று உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 300-க்கும் மேற்பட்டோர் பயணம்..!

மழை நிற்கும் வரை ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அந்த பெண்மணி, இந்த மாதிரியான செயலை மீண்டும் செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் அன்று [அக். 7] மழை பெய்தபோது, அவர் அவ்வாறு செய்தது புதிதல்ல.

Senior Bus Captain (BC) Hoe Soo Hiong has been on the job for the past 45 years. Whenever it rains, she will quickly…

Posted by SBS Transit Ltd on Tuesday, 20 October 2020

“எனது பயணிகள் மழையில் நனைந்து ஈரமானால், சளி பிடித்து நோய்வாய்ப்படுவார்கள் என்று நான் கவலைப்படுகிறேன்” என்று அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எனது பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இனிமையான சவாரி வழங்குவது வேலையின் ஒரு பகுதியாகும் ” என்றும் தெரிவித்துள்ளார்.

அவரின் சேவையை SBS Transit நிறுவனமும் பாராட்டி பதிவிட்டுள்ளது.

இதையும் படிங்க : சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…