சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 300-க்கும் மேற்பட்டோர் பயணம்..!

Singapore Tamilnadu Trichy Flights
PHOTO: Hardeep Singh Puri /Twitter

சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு, இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டும் வருகிறது.

இதையும் படிங்க : சம்பள பாக்கி, பணிநீக்கம் குறித்த புகார்…முதலாளிகளிடம் இருந்து மொத்தம் S$16 மில்லியன் திரும்ப பெற்ற ஊழியர்கள்..!

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 22) சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் 330-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தாண்டு மே 6ஆம் தேதியிலிருந்து, சுமார் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்த வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் இந்திய மக்களுக்கு நம்பிக்கையையும் மற்றும் மகிழ்ச்சியையும் வழங்குவது இதன் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 15 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இந்தியருக்கு சிறை..!

அதே போல சிங்கப்பூரில் இருந்து கொச்சி, பெங்களூரு மற்றும் ஹதராபாத் ஆகிய பகுதிகளுக்கும் விமானங்கள் நேற்று இயக்கப்பட்டன.

மேலும், வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்கள் பட்டியல், அதே போல அடுத்த மாதம் தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியலையும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னை, திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல விமான முன்பதிவு – பயண விதிகளுடன் தொடக்கம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…