மீண்டும் தலைதூக்கும் மோசடி – ஒருவரிடம் மட்டுமே குறைந்தது S$199,000 பணத்தை அபேஸ் செய்த கும்பல்

scam pretending spf
SPF & Unsplash.

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடிகளின் ஈடுபடுவது குறித்த புகார்கள் மீண்டும் எழுந்துள்ளது.

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடும் கும்பல் SPF அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, உங்களிடம் பணத்தை கேட்பார்கள். பின்னர் அதனை மூன்றாம் தரப்பு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றச் சொல்வார்கள் என்று சிங்கப்பூர் போலீஸ் படை கூறியுள்ளது.

வெளிநாடுகளில் சிறுநீரக பாதிப்பு / மரணத்தை ஏற்படுத்தும் சிரப் மருந்துகள் – சிங்கப்பூர் HSA எச்சரிக்கை

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் குறைந்தது 24 பேர் இவ்வகை மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சிங்கப்பூர் போலீஸ் கூறியுள்ளது.

அதன்மூலம் அவர்கள் இழந்த மொத்த தொகை குறைந்தது S$1.5 மில்லியன் ஆகும்.

அதாவது இதில் ஒரு தனி நபர் இழந்த மிகப்பெரிய தொகை குறைந்தபட்சம் S$199,000 ஆகும். கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது.

இதுபோன்ற ஆள்மாறாட்ட மோசடி குறித்து உஷாராக இருங்கள். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், ‘999’ஐ தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

செங்காங் ஈஸ்ட் ரோட்டில் ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்து – ஒருவர் மரணம்