வேலைவாய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை

மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 8.2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 12 சந்தைகள், உணவு நிலையங்களுடன் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பு

15 முதல் 77 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களில், 210 ஆண்கள் மற்றும் 92 பெண்கள் விசாரணையில் உள்ளனர் என்று காவல்துறை நேற்று (ஜூலை 17) தெரிவித்தது.

வேலைவாய்ப்பு மோசடிகள், இணைய காதல் மோசடிகள், ஈ-காமர்ஸ் மோசடிகள், ஆள்மாறாட்டம் மோசடிகள், சீன அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம், முதலீட்டு மோசடிகள், போலி சூதாட்ட மோசடிகள் மற்றும் கடன் மோசடிகளில் போன்ற 800க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகள், சிங்கப்பூர் முழுவதும் மேற்கொண்ட இரண்டு வார அதிரடிச் சோதனை நடவடிக்கையில் அந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கடல் உணவுகளை வாங்க பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – சிங்கப்பூர் உணவு அமைப்பு