சிங்கப்பூரில் கப்பலில் விழுந்து காயமடையந்த ஊழியர்…SCDF உதவி..!

SCDF responders rescue injured marine worker from container vessel
SCDF responders rescue injured marine worker from container vessel (Photo: Facebook/SCDF)

சிங்கப்பூரின் தென்கிழக்கில், நங்கூரமிடப்பட்ட ஒரு கொள்கலன் கப்பலில் இருந்து கீழ்த் தளத்தில் விழுந்த ஊழியரை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) நேற்று மதியம் (நவம்பர் 13) மீட்டது.

நேற்று மதியம் 12.30 மணியளவில், மருத்துவ உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், அதை அடுத்து இரண்டு SCDF கப்பல்கள் அனுப்பப்பட்டதாகவும் அது நேற்று இரவு பேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களில் கிட்டத்தட்ட 140 வேலையிட பாதுகாப்பு விதி மீறல்கள்

அவசரகால மருத்துவ தொழில்நுட்ப பயிற்சி பெற்ற 2 வல்லுநர்கள், நிலைமையை மதிப்பிடுவதற்காக விரைவாக மீட்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் கப்பலில் ஏறினர் என்றும் அது கூறியுள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த ஆடவர் சுயநினைவாக இருந்ததாகவும், ஆனால் அசையாமல் காணப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

அந்த ஆடவர் ஸ்ட்ரெச்சரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இரண்டு கப்பல்களுக்கு இடையில் கயிறுகளைப் பயன்படுத்தி மீட்கப்பட்டார்.

SCDF கப்பலின் மூலம் காயமடைந்த ஆடவர் மெரினா சவுத் பியருக்கு (Marina South Pier) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவருக்காக அவசரகால ஆம்புலன்ஸ் காத்திருந்தது.

அவரை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு ஆம்புலன்ஸ் குழுவினர் அவரை சோதனை செய்தனர்.

அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் லீ.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட S$2 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…