வேலை தேடுபவர்களின் தகுதிகள் குறைவானலும் முதலாளிகள் வாய்ப்பளிக்க வேண்டும்.!

Senior Minister Tharman Shanmugaratnam
Pic: FB/Tharman Shanmugaratnam

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைய ஆரம்பித்துள்ள நிலையில், நாம் அனைவரும் நம் பங்கை ஆற்றினால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும் என்பது இதன்மூலம் நாம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

இதே பாடத்தை வேலைத் துறையிலும் நாம் பயன்படுத்த வேண்டும் என்றும், முன்பைவிட வேகமாக இத்தகைய அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும் என்றும் சிங்கப்பூர் மூத்த அமைச்சர் திரு.தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் புதிதாக ஒரே ஒருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

வேலையைப் பொறுத்தவரையில் நாம் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி வருகிறோம் என குறிப்பிட்ட அவர், வேலையிழந்த சிங்கப்பூரர்களுக்கு உதவ அரசு முத்தரப்புப் பங்காளித்துவம் அனைத்து முயற்சிகளை  மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வேலை கிடைக்காத சூழலைக் கூடுமான வரை தவிர்த்துக் கொள்ள நாம் விரும்புவதாகவும், இதில் முதலாளிகள் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் எனவும் மூத்த அமைச்சர் திரு.தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

ராபின்சன் மூடல் எதிரொலி: வாடிக்கையாளர்கள் புகார்..!

மேலும், வேலை தேடி வருவோரிடம் தகுதிகள் சற்று குறைவாக இருந்தாலும் முதலாளிகள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் .

வேலை தேடுவோரும் கிடைக்கும் வேலைகளைப் பெற்றுக்கொண்டு அதில் மேம்பாடு காண முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் வேலை தேடுவோருக்காக www.jobsgohere.gov.sg என்ற இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதை  சுட்டிக்காட்டிய அவர், இதன்மூலம் வேலை மற்றும் பயிற்சி வாய்ப்புகளை பெற முடியும் என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…