மசாஜ் நிலையங்களில் பாலியல் தொடர்பான சேவையில் ஈடுபட்டதாக 6 பெண்கள் கைது

Singapore Police Force

கிம் கீட் லேன் (Kim Keat Lane), டர்ஃப் கிளப் சாலை மற்றும் சோபியா (Sophia) சாலையில் அமைந்துள்ள மூன்று மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து 28 முதல் 39 வயதுக்குட்பட்ட ஆறு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த அக்டோபர் 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில், டாங்ளின் போலீஸ் பிரிவினால் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, ​​ஆந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 84 பேர் மீது அமலாக்க நடவடிக்கை

இந்த மசாஜ் நிறுவனங்களுக்குள் பெண்கள் பாலியல் சேவைகளை வழங்கியதாக அல்லது விளம்பரப்படுத்தியதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேகம் எழுந்துள்ளது.

மசாஜ் நிறுவன சட்டத்திற்கு முரணாக, முறையான உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை அதில் ஒரு நிறுவனம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணைகள் நடந்து வருகின்றன.

மசாஜ் நிறுவன சட்டத்தின்கீழ், முறையான உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்குவதில் குற்றம் புரியும் நபர்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பயனியரில் (Pioneer) கனரக வாகனமான ட்ரெய்லர், லாரி மற்றும் கார்கள் மோதி விபத்து