உணவு, சாதனங்கள் அல்லது உணவுப் பொட்டலங்கள் மூலமாக கொரோனா கிருமி பரவுமா? – சிங்கப்பூர் உணவு அமைப்பு விளக்கம்..!

SFA 'not aware' of evidence COVID-19 virus can be transmitted to humans via food
(Photo: TODAY)

COVID-19 தொற்று கிருமியானது, உணவு, சாதனங்கள் அல்லது உணவுப் பொட்டலங்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.

CNAவின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உலகெங்கிலும் உள்ள அறிவியல் சமூகங்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் தற்போதைய அறிவு நிலைக்கு ஏற்ப இது புலப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று SFA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக மாற்றுவழி பற்றி அமைச்சர் ஓங் யீ காங் கருத்து..!

சீனாவில், உறையவைக்கப்பட்ட உணவு மற்றும் அதன் பொட்டலங்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக பல அறிக்கைகள் வந்ததை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது சூழ்நிலைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சிங்கப்பூரில் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் என்றும் SFA தெரிவித்துள்ளது.

உணவு, உணவு பொட்டலங்கள் அல்லது உணவு விநியோகத்தை கண்டு மக்கள் அஞ்சக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் (Mike Ryan) தெரிவித்துள்ளார்.

மேலும், உணவு அல்லது உணவு சங்கிலி வழியே இந்த வைரஸ் பரவுவது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg