சிங்கப்பூருக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக மாற்றுவழி பற்றி அமைச்சர் ஓங் யீ காங் கருத்து..!

Singapore may consider replacing 14-day isolation for travellers with 'rigorous testing': Ong Ye Kung
(Photo: Ong Ye Kung's Facebook page)

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளை 14 நாள் தனிமைப்படுத்துவத்துக்கு பதிலாக, கடுமையான சோதனை செய்வது பற்றி பரிசீலனை செய்யலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

இந்த தனிமை பயணிகளுக்கு ஒரு பெரிய தடுப்பாக உள்ளதாக ஓங் குறிப்பிட்டுள்ளார். அவர்களை கடுமையான சோதனைக்கு உட்படுத்தும் போது அதை மாற்ற முடியும், மேலும் இதை மற்ற நாடுகள் ஏற்கனவே செய்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

COVID-19 கிருத்தொற்று காரணமாக விமானப் பயணம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்ததை பற்றி அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சாங்கி விமான நிலையம் ஒரு நாள் மீண்டும் நிரம்பும் என்றும், SIA விமானங்கள் மீண்டும் வீழ்ச்சியில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச பயணிகள் போக்குவரத்தில், சிங்கப்பூர் உலகின் ஏழாவது மிகப் பரபரப்பான விமான நிலையம் என்ற அந்தஸ்தில் இருந்து சரிவு கண்டுள்ளதாக அவர் முகநூல் காணொளியில் தெரிவித்தார்.

அதாவது, உலகின் ஏழாவது பரபரப்பான விமான நிலையத்திலிருந்து 50வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பயணிகளின் வீழ்ச்சி மற்றும் விமானங்களின் தடை காரணமாக சிங்கப்பூரின் விமான நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமான நிலையத்தில், ஒரு நாளைக்கு 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்துசெல்லும், ஆனால் தற்போது 150க்கு குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நேரத்தில், தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருப்பது சவால்மிக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிங்கப்பூருக்குள், தொற்று கட்டுக்குள் உள்ள நாடுகளிலிருந்தும், பகுதிகளில் இருந்தும் விமான பயணிகள் அனுமதிக்கலாம்.

வர்த்தகப் பயணத்துக்கு மட்டும் தற்போது வழங்கப்பட்டுள்ள இருவழி அனுமதி முறையை, மற்ற வகையான பயணங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கனமழை காரணமாக கிரேக் ரோட்டில் திடீர் வெள்ளம்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg