சில நகரங்களில் இருந்து வரும் SIA, சில்க் ஏர் பயணிகள் சாங்கி விமான நிலையம் வழியாக செல்ல அனுமதி..!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் இருந்து வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சில்க் ஏர் பயணிகள் தற்போது சாங்கி விமான நிலையம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது இன்று வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் SIA தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

மற்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் வழியாக இந்த நகரங்களுக்கு பயணிகள் செல்ல முடியாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய நகரங்களில் அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன், பெர்த் (ஸ்கூட் வழியாக) மற்றும் சிட்னி ஆகியவை இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் அடங்கும்.

மேலும் நியூசிலாந்து நாட்டின் நகரங்களில் ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகியவை இதில் அடங்கும்.

SIA குழுமத்தில் உள்ள விமானங்களுக்கு இடையே மட்டுமே இந்த சேவை அனுமதிக்கப்படுகின்றன, அதாவது SIA, சில்க் ஏர் மற்றும் ஸ்கூட் ஆகியவையில் மட்டும்.

தற்போது, ​​பிற விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவில்லை.

இது வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!