சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர் மற்றும் மருத்துவமனையில் உள்ளோர் விவரம்..!

Singapore reports 451 new COVID-19 infections; nurse and dormitory security guard among 7 community cases
Nurse holding test tube with blood for 2019-nCoV analyzing. Novel Chinese Coronavirus blood test concept

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 655 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 26,532 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு 24 மணி நேர மருத்துவ உதவி செய்துவரும் தொழில்நுட்பம்..!

மேலும் 223 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 12,185 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

சமூக தொற்று சம்பவங்களில், சிங்கப்பூரின் தேசிய இதய மையத்தில் பணிபுரியும் செவிலியர் மற்றும் 31 சுங்கே கடுட் அவென்யூவில் உள்ள தங்கும் விடுதியின் பாதுகாப்பு காவலர் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரின் நேற்றைய நிலவரப்படி, புதிதாகப் பாதிக்கப்பட்ட 451 பேரில் 444 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.

தங்கும் விடுதிகளில் மேலும் 3 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,

  • 9 Sungei Kadut Street 3
  • 19A Tech Park Crescent
  • 113 Tuas View Walk 1

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 30 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் COVID-19 நோய்த்தொற்றுகள் முற்றிலும் இல்லாத இடமாக அறிவிப்பு..!