சிங்கப்பூர் SIA ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

(PHOTO: Reuters)

தகுதி வாய்ந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி இன்று (ஜனவரி 13) முதல் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலைய முனையம் 4இல் விமானத் துறையில் சில ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியின் ஒரு பகுதியாக இது நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கிய நிறுவனத்திற்கு $119,500 அபராதம்!

தற்போது வழக்கமான சோதனை திட்டத்தில் இருக்கும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்று SIA செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தடுப்பூசி பெறுபவர்கள்

  • கேபின் குழுவினர்
  • விமானிகள்
  • விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்ட ஊழியர்கள்
  • பயணிகளுடன் அடிக்கடி தொடர்பு கொள்ள வேண்டிய ஊழியர்கள்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியல் பணியாளர்கள்

பங்கேற்பு கட்டாயமில்லை, விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தகுதியான அனைத்து ஊழியர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள SIA குழுமம் அதிகமாக ஊக்குவிக்கிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சென்னை-சிங்கப்பூர் இடையே செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…