சிங்கப்பூரில் அடுத்த ஆண்டில் 5G கட்டமைப்பு எத்தனை விழுக்காடு நிறைவுபெறும்? – அமைச்சர் பதில்!

Singapore 5g network status
Pic: Reuters

சிங்கப்பூரில் 2022ம் ஆண்டிற்குள் நாட்டின் பாதி அளவில் 5G கட்டமைப்பு எத்தனை விழுக்காடு நிறைவு பெறும் என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுவா கெங் வீ லூயிஸ் (Chua Kheng Wee Louis) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதற்கு தகவல், தொடர்பு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) எழுத்துபூர்வ பதிலளித்தார்.

சிங்கப்பூரில் 5G கட்டமைப்பு மின்னிலக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உள்கட்டமைப்பு என்றும், புதுமையான செயல்பாடுகளை அது எளிதாக்கும் என்றும் அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறினார்.

கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை 200,000ஆக உயர்த்த சிங்கப்பூர் முடிவு

5G கட்டமைப்பு மூலம் நாட்டில் உள்ள பயனீட்டாளர்களும் மற்றும் நிறுவனங்களும் பயன்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பாதி பகுதிக்கு வரும் 2022ம் ஆண்டின் இறுதிக்குள் 5G வெளிப்புறக் கட்டமைப்பை வழங்கும் திட்டம் எதிர்பார்த்தபடி நடைபெறுகிறது என்றும், 2025ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதற்கும் 5G கட்டமைப்பை வழங்கும் இலக்கும் அதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் முன்கூட்டியே 5G பயன்பாட்டை ஊக்குவிக்க 5G செயல்பாடுகள் மீதான சோதனைகள் நடைபெற்று வருகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு இருதய பாதிப்பு – பொது வார்டுக்கு இளையர் மாற்றம்!