தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு இருதய பாதிப்பு – பொது வார்டுக்கு இளையர் மாற்றம்!

(photo: mothership)

Pfizer-BioNTech/ Cominarty கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸைப் போட்டுக்கொண்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, இருதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட 16 வயது சிங்கப்பூர் இளையர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் காங்கிரஸில், அந்த இளையர் சிகிச்சைக்கு நல்ல முறையில் உதவிவருவதாகவும் சுகாதார அமைச்சின் (MOH) குழும இயக்குநர் தினேஷ் வாசு டாஷ் பகிர்ந்து கொண்டார்.

தேசியக் கொடிகள், தேசிய தின அலங்கார பேனர்களை வெட்டி சேதப்படுத்தியதாக ஆடவர் கைது

கடந்த ஜூலை 3 அன்று, அவர் முதலில் Khoo Teck Puat மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்., பின்னர் ஆபத்தான நிலையில் NUHஇன் ICUக்கு மாற்றப்பட்டார்.

ஜூன் 30 நிலவரப்படி, mRNA தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்ட பிறகு, myocarditis மற்றும் pericarditis தொடர்பான 12 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தினேஷ் பகிர்ந்து கொண்டார்.

அந்த 12 பேரில் ஏழு பேர் ஆண்கள், அவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்