சிங்கப்பூருக்குள் நுழைய 2000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அனுமதி!

Singapore visa free travel arrangement
Pic: REUTERS/Edgar Su

கோவிட்-19 தொற்றுப் பரவலுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட தடுப்பூசிப் போட்டுக்கொண்டவர்களுக்கான பயணத் திட்டத்தின் அடிப்படையில் 8 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, டென்மார்க், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய விண்ணப்பிக்கலாம்.

“சிங்கப்பூரில் இருந்து சென்னை, திருச்சிக்கு கூடுதல் விமான சேவை”- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,409 பயணிகளின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் 1,685 பயணிகள் நீண்ட கால சிங்கப்பூர் குடியிருப்பிற்கான நுழைவு அட்டையுடையவர்கள் என்பதும், 724 பயணிகள் குறுகிய கால சிங்கப்பூர் குடியிருப்பிற்கான நுழைவு அட்டையுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 537 பயணிகளின் விண்ணப்பங்களும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 440 பயணிகளின் விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரிட்டனிலிருந்து மட்டும் சுமார் 976 பயணிகளின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் பயணம் செய்ய முடியும். இதுபோல் சிங்கப்பூருக்குள் நுழையும் 12 வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள் பயணம் செய்ய, பயண அட்டைக்கு விண்ணப்பிக்க அவசியமில்லை.

மேலும் இந்த திட்டத்தின் அடிப்படையில் குறுகிய கால சிங்கப்பூர் குடியிருப்பிற்கான நுழைவு அட்டையுடையவர்களும், நீண்ட கால சிங்கப்பூர் குடியிருப்பிற்கான நுழைவு அட்டையுடையவர்களும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கான பயண அட்டையை பெறுவது அவசியம்.

இவ்வாறு இத்திட்டத்தின் கீழ் பயண அட்டை பெறும் பயணிகள் அக்டோபர் 19ஆம் தேதியிலிருந்து நவம்பர் 17ஆம் தேதி வரை சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறு பிள்ளைகளுடன் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பயணத் திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிக பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் மேலும் 3,190 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!