வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் வர அனுமதி

Pic: Najeer Yusof/TODAY

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்குள் வர அனுமதிக்கப்படும்.

இதனை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (அக்டோபர் 5) தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தனியார் வீடுகளை வாடகைக்கு வழங்கிய இருவர் மீது குற்றச்சாட்டு

வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பணிப்பெண்களுக்கான புதிய நுழைவு விண்ணப்பங்களை மனிதவள அமைச்சகம் ஏற்கத் தொடங்கும் என்று நாடாளுமன்ற கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்தார்.

இருப்பினும், பொது சுகாதார காரணங்களுக்காக நுழைவு அனுமதி தொடர்ந்து மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், வீட்டுப் பணிப்பெண்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஆகலாம், என்றார்.

மேலும், இது நாட்டின் கோவிட்-19 கிருமித்தொற்று சூழ்நிலையை பொறுத்து இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வட்டார பகுதிகளின் நிலைமை மேம்பட்டால், சிங்கப்பூருக்குள் நுழைய கூடுதலாக ஒப்புதல் அளிக்கலாம், என்றும் அவர் கூறினார்.

மே மாதத்தில் நுழைவு அனுமதி ஒத்திவைக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் நுழைய முடியும் என்றும் டாக்டர் டான் கூறினார்.

தங்கும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை – MOH