சிங்கப்பூரில் ஒரே நாளில் உச்ச அளவாக 728 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Singapore coronavirus cases cross 4,000 with new daily high of 728 cases
Singapore coronavirus cases cross 4,000 with new daily high of 728 cases

சிங்கப்பூரில் புதிதாக 728 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 16) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,427ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 9வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

கடந்த இரண்டு வாரங்களைப் போலவே, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டுத் ஊழியர்களின் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, அதாவது 654 புதிய நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள புதிய சம்பவங்களில், 48 உள்ளூர் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மேலும் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கக்கூடிய 26 வேலை அனுமதி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 19 சதவீத புதிய சம்பவங்களின் தொடர்பு இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான தொடர்புகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஏழாவது நாளாக வெளிநாட்டில் இருந்து வந்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை.

இதையும் படிங்க : அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!

மேலும், இன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 683ஆக உள்ளது.