அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!

Police will investigate after criminal force used against safe distancing enforcement officers: Masagos
Police will investigate after criminal force used against safe distancing enforcement officers: Masagos (Photo: Ministry of the Environment and Water Resources)

பாதுகாப்பு இடைவெளி அமலாக்க அதிகாரிகளுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை காவல்துறை விசாரிக்கும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி புதன்கிழமை (ஏப்ரல் 15) தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற குற்றச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் பயணிகள் எண்ணிக்கை 60% சரிவு..!

COVID-19 பரவுவதைத் தடுக்க ஒரு மாத கால சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாயன்று, வீட்டை விட்டு வெளியே செல்லும் பெரும்பாலான மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

“இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்கிறார்கள்” என்று திரு மசகோஸ் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். ஆனாலும், சிலர் அதற்கு இணங்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் பற்றி அறிந்து தாம் வருத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய அமலாக்க அதிகாரிகள் தாக்கப்படுவது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக திரு மசகோஸ் கூறியுள்ளார். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம், என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!