சிங்கப்பூரில் 9வது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

COVID-19: Foreign worker dormitory Mandai Lodge 1 declared an isolation area
COVID-19: Foreign worker dormitory Mandai Lodge 1 declared an isolation area (Image: Screengrab from Google Maps)

சிங்கப்பூரில் ஒன்பதாவது வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் (MOH) அறிவிப்பின்படி, மண்டாய் லாட்ஜ் 1 (Mandai Lodge 1) தங்கும் விடுதி COVID-19 நோய்த்தோற்று குழுமமாக அடையாளம் காணப்பட்ட பின்னர் அரசிதழில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமலாக்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் புரிந்தால் காவல்துறை விசாரணை – மசகோஸ்..!

COVID-19 பரவல் அல்லது சாத்தியமான வாய்ப்புகளை தடுக்கும் நோக்கில் அந்த விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நேற்று புதன்கிழமை 447 புதிய நபர்களுக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் மொத்த எண்ணிக்கை 3,699ஆக உயர்ந்துள்ளது.

இதில் மொத்தம் 404 நபர்கள், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவர்கள்.

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட நபர்களில் ஒருவருக்கு முந்தைய ஆறு சம்பவங்களுடன் தொடர்பு உள்ளது. இதனை அடுத்து, Mandai Lodge புதிய குழுமமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் பயணிகள் எண்ணிக்கை 60% சரிவு..!