சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு குறித்த விரிவான தகவல்!

Pic: Today

சிங்கப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனா தினசரி பாதிப்பு மூன்றாவது நாளாக குறைந்துள்ளது.

“சிங்கப்பூர், சிட்னி இடையே விமான சேவை”- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (18/10/2021) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (18/10/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 2,553 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. 2,552 பேருக்கு உள்ளூர் அளவில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2,008 பேருக்கு சமூக அளவிலும், 544 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வெளிநாட்டு பயணி ஒருவருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிக ஆபத்துள்ள நாடு என COVID-19 பயண ஆலோசனையை வெளியிட்ட நாடு

இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,731 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்ததால், மொத்த கொரோனா உயிரிழப்பு 239 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 1,714 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 337 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 67 பேர் கவலைக்கிடமான நிலையில் ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.