கடைசி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று பரவல் பட்டியலிலிருந்து நீக்கம்!

Last COVID-19 cluster closes
Last COVID-19 cluster closes (PHOTO: AFF/ Roslan Rahman/ Getty Images)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கடைசியாக இருந்த COVID-19 தொற்று பரவல் இடம், அபாயமிக்க பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

அதாவது, சிங்கப்பூரில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உருவான அனைத்து நோய் பரவல் இடங்களும் அந்த பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

நேற்று (நவம்பர் 24), Cassia @ Penjuru தங்கும் விடுதி தொற்று பரவல் அபாயமிக்க பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் (MOH) அறிவித்துள்ளது.

அதாவது, அங்கு தொடர்ந்து 28 நாட்களுக்குப் பிறகு எந்த புதிய தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த விடுதி மூடப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 3, 2020-க்குப் பிறகு முதல் முறையாக எந்த நோய் பரவல் குழுமமும் செயலில் இல்லை என்று MOH கூறியுள்ளது.

முதல் பாதிப்பு கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஏற்பட்டதில் இருந்து, சிங்கப்பூரில் நோய்ப்பரவல் எண்ணிக்கை 58,000ஐ தாண்டியுள்ளது. அதில் 28 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 4 அன்று, சீன மருந்துக் கடையான Yong Thai Hang Medical Hall முதல் நோய் பரவல் குழுமமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர் தற்கொலை… மனிதவள அமைச்சகம் விசாரணை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…