COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 198 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 2,108ஆக உயர்வு..!

Singapore COVID-19 Confirmed cases
Coronavirus: 198 new cases of infection on Friday

சிங்கப்பூரில் புதிதாக 198 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 10) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 2,108ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$345,000 நன்கொடை அளித்த சிங்கப்பூரர்கள்..!

புதிய சம்பவங்களில் பல, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

அதாவது 79 சம்பவங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையது.

மேலும் 48 சம்பவங்கள் விடுதிகள் அல்லாத குழுக்கள் அல்லது பிற நபர்களுடன் தொடர்புடையது என்றும் MOH தெரிவித்துள்ளது.

71 புதிய சம்பவங்களில் தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் தெம்பனிஸ் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!