COVID-19: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு S$345,000 நன்கொடை அளித்த சிங்கப்பூரர்கள்..!

Singaporeans give S$345,000 to help foreign workers
Singaporeans give S$345,000 to help foreign workers (Photo: Zakir Hossain Khokan)

சிங்கப்பூரில் COVID-19 தாக்கம் காரணமாக வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த கவலை அதிகரித்து வரும் சூழலில், அவர்களுக்கு உதவும் வகையில் சிங்கப்பூரர்கள் தங்களின் நன்கொடைகளை தாராளமாக வழங்கி வருகின்றனர்.

பல நிதி திரட்டும் அமைப்புகள் 24 மணி நேரத்திற்குள் தங்களின் இலக்குகளை அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஒரு சில நாட்களில் மட்டும் மொத்தம் S$345,000 நிதியை திரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் தெம்பனிஸ் தங்கும்விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!

Transient Workers Count Too (TWC2)-இன் பொது மேலாளர் திரு ஈதன் குவோ, ஏப்ரல் 5ஆம் தேதி இரவு நிதி திரட்ட ஏற்பாடு செய்தார். நிதி திரட்டல் இலக்காக ஆரம்பத்தில் S$20,000 நிர்ணயம் செய்தார்.

இதன் நோக்கம் வெளிநாட்டு ஊழியர்களின் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. விடுதிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் இணைய வசதிகளின்றி தவிப்பதாகவும், அவர்களின் குடும்பத்தாருடன் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற ஊழியர்களுக்கு இணையம் வழியாக சிம் கார்டுகளுக்கு கட்டணம் செலுத்தும் நோக்கில் நிதி திரட்டல் மேற்கொள்ளப்படுகிறது.

“நாங்கள் S$20,000 இலக்கை அடைவோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏற்கனவே மதிய உணவு நேரத்திற்குள் இலக்கில் கால் அளவை கடந்ததை கண்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் காலையில், அந்த இலக்கை தாண்டிவிட்டோம்,” என்று திரு குவோ கூறினார்.

பின்னர் அவர் நிதி இலக்கை S$120,000 என நிர்ணயித்தார், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 9) மாலை 5 மணி நிலவரப்படி, S$116,000க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: இந்தியரின் மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் இல்லை: சுகாதார அமைச்சகம் (MOH)..!