சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள்..!

COVID-19 : stricter safe distancing measures introduced
Stricter safe distancing measures will be introduced to reduce the risk of further local transmission

சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தைக் குறைக்க பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 20) அன்று மேலும் 40 நோய்த்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!

250 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மூத்தோர்களுக்கான அனைத்து சமூக நடவடிக்கைகளும், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

250க்கும் குறைவான நபர்களைக் கொண்ட நிகழ்வுகள், உணவகங்கள் மற்றும் சினிமாக்கள் போன்ற பொதுமக்களுக்கு செல்லக்கூடிய இடங்களில் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய மற்றும் தனியார் கூட்டங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் இந்த நடவடிக்கைகள் பொருந்தும்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 40 புதிய நபர்களுக்கு கிருமித்தொற்று உறுதி..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil