சிங்கப்பூரில் வேலை அனுமதி பெற்றவர்களுக்கு தொற்று பாதிப்பு..!

Singapore COVID-19 Work pass imported
(Photo: Reuters)

சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்பபடி, 7 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது என சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்திருந்ததது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும், இங்கு அவர்கள் வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மையங்களுக்கு செல்லலாம்.

நேற்று புதன்கிழமை, உள்ளூர் கிருமித்தொற்று சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் MOH தெரிவித்துள்ளது. அதே போல, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் யாரும் பாதிக்கப்படவில்லை.

அந்த புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 57,987ஆக உயர்ந்துள்ளது.

இதில் ஆறு நபர்கள் சிங்கப்பூரில் வேலை செய்கின்றனர். அவர்களில் ஐந்து பேர், 25 முதல் 34 வயதுக்குட்பட்ட பெண்கள், மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸிலிருந்து வந்த வேலை அனுமதி அட்டை பெற்றவர்கள்.

ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த, வேலை அனுமதியின் கீழ் பணிபுரிபவர்.

குறிப்பிட்ட 9 நாடுகளிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் குறித்த அறிவிப்பு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…