உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா.? – அமைச்சர் விளக்கம்.!

Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வரும் நிலையில், சில கட்டுப்பாடுகள் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி முதல் தளர்த்தப்பட்டன.

உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் இரு நபர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், உணவகங்களில் ஜூலை 12 முதல் 5 பேர் கொண்ட குழு ஒன்றாக அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டது.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிடும் தற்போதைய நடைமுறைகளில், எந்த மாற்றமும் இல்லை என சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) தெரிவித்துள்ளார்.

கிருமித்தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள்… தொடர்ந்து ஆதரவளிக்கும் தொண்டூழிய குழுக்கள்

சிங்கப்பூரின் KTV குழுமம் பெரிய கிருமித்தொற்று குழுமமாக மாறிவரும் சூழ்நிலையில் அமைச்சர் திரு. ஓங் இதனை தெரிவித்தார், KTV கிருமித்தொற்று குழுமத்தோடு தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 53ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் COVID-19க்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாகவும், முன்பைக் காட்டிலும் தற்போது சிங்கப்பூரின் மீள்திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள்தொகையில் தற்போது 70 விழுக்காட்டுக்கும் அதிமானோர் குறைந்தது ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றும், 40 விழுக்காட்டுக்கும் அதிமானோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் திரு. ஒங் தெரிவித்துள்ளார்.

மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், தேவைப்படும்போது மட்டும் வெளியில் சென்று மற்றவர்களைச் சந்திக்குமாறும் சுகாதார அமைச்சர் திரு. ஒங் கேட்டுக்கொண்டார்.

பொங்கோல் பகுதியில் ஆடவர் கத்தியால் குத்திக்கொலை – சந்தேக நபர் கைது.!