“சிங்கப்பூரில் கூட்டமான இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!”

 

சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (டிச.15) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி பெருவிழா!

அதில், “கடந்த டிசம்பர் 3- ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரை ஏழு நாட்களில் மட்டும் சிங்கப்பூரில் 56,043 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரம் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32.035 ஆக இருந்தது.

கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. எனவே, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல், உடல்நலம் நன்றாக இருப்பவர்கள் கூட, கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசங்களை மறக்காமல் அணிய வேண்டும். கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவர்கள், செவிலியர்களும், படுக்கைகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த பொதுமருத்துவமனைகளுடன் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

‘Sheng Siong’ சூப்பர் மார்க்கெட்டின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

இந்த வார இறுதியில் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கம் 10- ல் இரண்டாவது கோவிட்- 19 சிகிச்சை நிலையம் திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே, கிராஃபர்ட் மருத்துவமனையில் (Crawfurd Hospital) கோவிட்- 19 சிகிச்சை நிலையம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடு செல்லும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வரும் டிசம்பர் 19- ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரங்களை நாள்தோறும் சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.