ஆடம்பரக் கைப்பைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள்….விமான நிலையத்தில் சிக்கிய பயணிகள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்!

Photo: Singapore Customs

 

 

கடந்த மே 15- ஆம் தேதி முதல் மே 21- ஆம் தேதி வரை சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை சிங்கப்பூர் சுங்கத்துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து அதிரடியாக சோதனையிட்டனர்.

சிங்கப்பூர் அமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசிய இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- ஆலோசித்தது என்ன?

அப்போது, பயணிகளிடம் இருந்து ஆடம்பரக் கைப்பைகள், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள், மதுபானங்கள் உள்ளிட்டவைகளுக்கு உரிய சுங்க வரி மற்றும் பொருள் மற்றும் சேவை வரி செலுத்தாமல் கொண்டு வந்ததும், அளவுக்கு அதிகமாக கொண்டு வந்ததும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம் சுமார் 18,491 வெள்ளி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், சுங்க வரி ஏய்ப்பு செய்த சுமார் 115 பயணிகளிடம் இருந்து 28,000 வெள்ளி அபராமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. அதேபோல், வரி ஏய்ப்பு தொடர்பாக மட்டும் 115 பயணிகள் பிடிப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாங்கி விமான நிலையம் வந்த சிங்கப்பூரர் ஐந்து ஆடம்பரக் கைப்பைகளுடன் பிடிப்பட்டுள்ளார். அந்த கைப்பைகளின் மதிப்பு சுமார் 13,825 வெள்ளி என்றும், அதற்காக அவர் 1,106 வெள்ளியை பொருள், சேவை வரியாக செலுத்தாமல் ஏமாற்ற முயன்றுள்ளார்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் அர்ச்சகர்க்கு 6 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் அனைவரும் வரி செலுத்த வேண்டிய பொருள்கள் குறித்த விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். அது பயணிகளின் பொறுப்பு. வரி ஏய்ப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செய்யும் பயணிகளுக்கு கூடுதலாக அபராதத்தொகை செலுத்த நேரிடும். சுங்க வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்தாலோ, செய்ய முயன்றாலோ நிரூபிக்கப்பட்டால், அவர்கள் சுமார் வரி ஏய்ப்பு செய்தத் தொகையை 20 மடங்காக செலுத்த வேண்டும் (அல்லது) தொகையை செலுத்தாதவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.