உணவகங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தளர்வுகள்..!

Singapore dining allow five
Pic: Ili Nadhirah Manosr/TODAY

சிங்கப்பூரில் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் 5 பேர் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் பானக் கடைகளில் சாப்பிடுபவர்கள் தடுப்பூசி நிலைக்கான (vaccination status) ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தினத்தில் பிறந்த குழந்தைகள்- குடும்பங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

இருப்பினும், இந்த தளர்வு ஹாக்கர் சென்டர் மற்றும் காபி கடைகளுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக இருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும், அவர்கள் முழுமையாக அல்லது முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாகவும் இருக்கலாம்.

உணவகங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து பேர் குழுக்களில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட உயர்த்தப்பட்ட விழிப்புநிலைக் கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்த்தப்படவுள்ளன. நோய்த்தொற்று பரவல் நிலவரம் கட்டுக்குள் இருந்தால், ஆகஸ்ட் 19 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தேசிய தினம் 2021: சாங்கி விமான நிலையம் வெளியிட்ட பிரத்தியேக காணொளி.!