சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சள் நிறமாக மாற உள்ள “DORSCON எச்சரிக்கை”

TODAY

சிங்கப்பூரில் கோவிட்-19 சூழல் மேம்பட்டு வரும் நிலையில், DORSCON (Disease Outbreak Response System Condition) எச்சரிக்கை நிலை ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாற உள்ளது.

Dorscon எச்சரிக்கை நிலை என்பது நாட்டின் நோய்ப்பரவல் நிலைமையை குறிக்கும். இதில் மஞ்சள் நிறம் என்பது பொதுவாக, ஒட்டுமொத்தமாக, நாடு இயல்பு நிலையில் உள்ளதை குறிக்கும்.

“பாதுகாப்பு இடைவெளி இனி தேவையில்லை”… குழு, வேலையிட வரம்பு இல்லை – அசத்தல் அறிவிப்புகள் ஓர் பார்வை!

சிங்கப்பூரில் கடந்த பிப்ரவரி 7, 2020 அன்று DORSCON எச்சரிக்கை நிலை ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது வரும் ஏப்ரல் 26 2022 அன்று மஞ்சள் நிறமாக மாற உள்ளது.

Dorscon சிங்கப்பூரின் தொற்றுநோய்க்கான தயார்நிலை திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது தற்போதைய சூழல் மற்றும் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை விவரிக்கிறது.

தொற்றின் தீவிர நிலை, மேலும் அது எவ்வாறு பரவும் என்ற அதன் தன்மை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து Dorscon எச்சரிக்கை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய நிறங்களாக மாற்றப்படும்.

JUSTIN: வெளிநாட்டு பயணிகளுக்கு மஜா அறிவிப்பு: சிங்கப்பூருக்குள் நுழைய எந்தவித கோவிட்-19 சோதனைகளும் இனி தேவையில்லை!