தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் – 4 பேர் கைது!

Singapore duty-unpaid cigarettes arrested
(Photo: Singapore Customs)

சிங்கப்பூரில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய ஆயிரக்கணக்கான அட்டைப்பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து, சரக்கு அனுப்பும் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் அவருடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்று சிங்கப்பூர் சுங்கத் துறை இன்று (நவம்பர் 25) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மதுரைக்கு 300க்கும் மேற்பட்டோர் பயணம்

இதில் 44 முதல் 56 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சிகரெட்டுகளுக்கு தீர்வை, சரக்கு மற்றும் சேவை வரி (GST) கிட்டத்தட்ட S$163,000 வரை ஏய்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 20 மற்றும் 21ஆம் தேதி, சாங்கி சுற்றுவட்டாரங்களில் சுங்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதில் 1,200 அட்டைப்பெட்டிகள் மற்றும் 11 பாக்கெட் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை பறிமுதல் செய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hendon Road மற்றும் Netheravon Road ஆகிய இடங்களில் 2 கார்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 4 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான காவல்துறை விசாரணை தொடர்கிறது.

கடைசி வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று பரவல் பட்டியலிலிருந்து நீக்கம்!

வெளிநாட்டு கட்டுமான ஊழியர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…