வெளிநாட்டினருக்கான உலகின் மிக செலவு மிகுந்த இடம் – சிங்கப்பூர் இரண்டு இடங்கள் சரிவு!

Singapore falls cost of living
Singapore falls cost of living Ranking (Photo: Marina Bay/FB)

வெளிநாட்டினருக்கான உலகின் மிக செலவு மிகுந்த இடங்களின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டு இடங்கள் சரிந்து 14வது இடத்தைப் பிடித்துள்ளது.

முக்கியமாக COVID-19 தொற்றுநோயின் காரணமாக சிங்கப்பூர் டாலர் (SGD) மதிப்பில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக இந்த சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கிருமித்தொற்று!

இருப்­பி­னும், சிங்கப்பூர் ஆசிய அளவில் இந்த வருடம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த சரிவை பற்றி­ய கார­ணத்தை ECA இண்­டர்­நே­ஷ­ன­லின் ஆசி­ய கண்டத்திற்கான இயக்குநர் திரு. லீ குவேன் விளக்­கி கூறியுள்ளார்.

ECA இன்டர்நேஷனலின் வருடாந்திர செலவு அறிக்கை, 121 நாடுகளில் 208 நகரங்களில் உணவு, போக்குவரத்து மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட அன்றாட பொருட்களின் விலையை ஒப்பிடுகிறது.

வெளிநாட்டு ஊழி­யர்கள் மேற்கொள்ளும் செலவுகள், அதாவது மளி­கை பொருட்கள், ஓய்வு குறித்து அனுபவிக்கும் பொருள், சேவைகள் தொடர்பில் இந்த தரவரிசை கணக்கிடப்படுகிறது.

ஹாங்காங் மீண்டும் உலகின் மிக செலவு மிகுந்த நகரமாக முதலிடத்தை பிடித்தது.

டோக்கியோ (2 வது), நியூயார்க் (3 வது) மற்றும் ஜெனீவா (4 வது) ஆகியவை தங்களின் தரவரிசையில் 2019 முதல் மாறாமல் முதல் நான்கு இடங்களை தக்கவைத்துள்ளன.

சிங்கப்பூரின் மொத்த வேலைவாய்ப்புகளில் 10ல் ஒன்பது பேர் வெளிநாட்டினர்!

இயந்திரங்களிலிருந்து சட்டவிரோதமாக முகக்கவசங்களை பெற்ற சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…