மறைந்த பிரபல எழுத்தாளர் ராமன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

File Photo

சிங்கப்பூரில் உள்ள பிரபல எழுத்தாளர் ஏ.பி.ராமன் (வயது 90) நேற்று முன்தினம் (09/02/2022) காலமானார். அவரது மறைவுக்கு சிங்கப்பூரில் எழுத்தாளர்கள், தமிழ் சங்கங்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான வேலைகளில் அட்ஜஸ்ட்மெண்ட்; லஞ்சம் வாங்கியவருக்கு சிறை, அபராதம்.!

உடல் நலக்குறைவால் ஏ.பி.ராமன், டான் டோக் செங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 28- ஆம் தேதி அன்று ஏ.பி.ராமன் வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (09/02/2022) இரவு 09.00 மணியளவில் ஏ.பி.ராமன் தனது வீட்டிலே காலமானார்.

மறைந்த பிரபல எழுத்தாளர் ராமன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

கடந்த 1932- ஆம் ஆண்டு தமிழகத்தின் எங்கு பார்த்தாலும் கோயில்கள் நிறைந்த மாவட்டமான கும்பகோணத்தில் பிறந்தவர் ஏ.பி.ராமன். பின்னர், அதே மாவட்டத்தில் தனது படிப்பை முடித்துக் கொண்டு, 1952- ஆம் ஆண்டு மலேசியாவிற்கு சென்றார். அங்கு காவல்துறையில் எழுத்தர் பணி ஏ.பி.ராமனுக்கு கிடைத்தது. காவல்துறையில் தொடர்ந்து பணிப் புரிந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியுள்ளார். பின்பு, அங்கு ‘கலைமலர்’ என்ற பெயரில் திரைத்துறைச் சார்ந்த பத்திரிகையும் தொடங்கி சிறப்பாகக் கொண்டு சென்றார்.

ஸ்ரீ சிவன் கோயில் பிப்.14 வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு!

1960- களில் சிங்கப்பூருக்கு வந்த ஏ.பி.ராமன் தனது குடும்பத்துடன் இங்கு குடியேறினார். அதைத் தொடர்ந்து, ஆர்.டி.எஸ். ஒலிபரப்புச் சேவையில் அவர் செய்தித் தொகுப்பாளராகப் பணியாற்றினார். குறிப்பாக, இந்த காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரையுலகினரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக அறியப்பட்டவர் ஏ.பி.ராமன். எழுத்தாளர், பத்திரிகையாளர், செய்தி தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட ஏ.பி.ராமன், சிங்கப்பூரில் உள்ள மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். தனது வாழ்நாளில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் துறைக்கு முழுமையாக அர்ப்பணித்தார்.

சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது இந்திய அரசு- விரிவான தகவல்!

எழுத்தாளர் ஏ.பி.ராமன் மறைவு சிங்கப்பூரில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் துறைக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.