வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து கொடுத்த புகார்கள் என்னென்ன தெரியுமா?

new-portal-enables-lower-wage workers
Pic: AFP

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து புகார் செய்கிறார்களா என்ற எண்ணம் நமக்கு இருக்கும்.

ஆம், வெளிநாட்டு ஊழியர்கள் பலர் வேலை தொடர்பாக பல புகார்களை செய்துள்ளது குறித்து மனிதவள அமைச்சர் டான் நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக கூறியுள்ளார்.

விதிகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்கள்.. தொடர்ந்து பிடிபடும் அவர்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்படலாம்

கடந்த 5 ஆண்டுகளில் வந்த புகார்கள் குறித்த புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

புகார்கள் என்னென்ன?

  • வேலைக்கு லஞ்சம் கொடுப்பது
  • சட்டவிரோத வேலைகளை கொடுப்பது
  • வெளிநாட்டு ஊழியர்களின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் ஏஜென்ட்கள்
  • அதிக சம்பளத்துடன் வேலை என்று சேர்த்த பிறகு கொடுக்காமல் ஏமாற்றுவது
  • சட்டவிரோதமாக மற்ற வேலைகளை செய்யும் படி ஏவுவது

மேற்கண்ட புகார்கள் தான் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் தைரியமாக முன்வந்து அளித்த புகார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு உறுதுணையாக அமைச்சகத்தின் FAST என்னும் அமைப்பு இருந்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடங்களில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னர் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து புகாரளிக்க ஊழியர்களை ஊக்குவிக்கும் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு அதற்கான அதிகாரம் அளிக்கும் வகையில் மூன்று மாத புதிய இயக்கமாக இது தொடங்கப்பட்டது.

முழு விவரம்: வெளிநாட்டு ஊழியர்கள் இனி தைரியமாக இதை செய்யலாம் – புதிய இயக்கம் தொடக்கம்

“10 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.. இப்போதுதான் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து இருக்கிறேன்” – வெளிநாட்டு ஊழியர்களின் சுற்றுலா