விதிகளை மீறும் வெளிநாட்டு ஊழியர்கள்.. தொடர்ந்து பிடிபடும் அவர்களுக்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்படலாம்

foreign workers singapore job illegal
(Photo: Ministry of Manpower)

சிங்கப்பூரில் உணவு விநியோக வேலையை வெளிநாட்டு ஊழியர்கள் செய்வது சட்டவிரோதமானது.

இருப்பினும் மலேசிய நம்பர் கொண்ட மோட்டார் சைக்கிள்களில், GrabFood நிறுவன ஆடைகளை அணிந்து வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்வதாக கூறப்பட்டுள்ளது.

“10 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.. இப்போதுதான் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து இருக்கிறேன்” – வெளிநாட்டு ஊழியர்களின் சுற்றுலா

அது போன்ற பல வெளிநாட்டு ஊழியர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து, மலேசிய-பதிவு பெற்ற மோட்டார் சைக்கிள்கள் மூலம் சிங்கப்பூரில் GrabFood டெலிவரி செய்வதாக ஸ்டாம்ப் வாசகர் புகார் செய்துள்ளார்.

சில வெளிநாட்டு ஊழியர்கள் யாருடமும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விவேகமாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

“சிலர் மோட்டார் சைக்கிள் இருக்கையில் GrabFood பைகளை வைப்பதில்லை, பெட்டி மட்டுமே வைத்திருக்கின்றனர். அதாவது அவர்கள் சிங்கப்பூரில் கிராப்ஃபுட் டெலிவரி செய்கிறோம் என்று மக்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உணவை உள்ளே மறைத்து வைத்து விடுகின்றனர்,” என்று ஸ்டாம்ப் வாசகர் கூறினார்.

'They hide the food': Man accuses Malaysians of working illegally as delivery riders in Singapore
Photo: Stomp

சமீபத்தில், இந்தியர் உட்பட நான்கு வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக உணவு விநியோக ஓட்டுநராக வேலை செய்து பிடிபட்டனர், அவர்கள் மீது கடந்த செப்டம்பர் 26 அன்று குற்றச்சாட்டப்பட்டது.

இதுபோன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூரில் பணிபுரிய நிரந்தரமாகத் தடை விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

“ஊழியர்களுக்கு முறையான காலணிகள் இல்லை, விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம்” – சிக்கிய 435 நிறுவனங்கள்