சிங்கப்பூரில் 8,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள்!

Singapore Foreign workers Deepavali
Singapore Foreign workers Deepavali festive meals (PHOTO: Hope Initiative Alliance/FB Page)

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, சுமார் 8,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த மகிழ்வான நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட தன்னார்வ ஓட்டுநர்கள் தீவு முழுவதும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதனை விநியோகம் செய்ய உதவி செய்தனர்.

சிங்கப்பூரில் தொடர்ந்து 5வது நாளாக சமூக தொற்று பரவல் இல்லை.

இந்த தீபாவளி பண்டிகை உணவு பொட்டலங்களில், சிக்கன் பிரியாணி, கேசரி, முருக்கு, பிற இந்திய இனிப்புகள் மற்றும் பானங்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும், அந்த உணவு பொட்டலங்களோடு மற்றொரு இந்திய இனிப்பு வகையான 8,000 லட்டுகளும் விநியோகிக்கப்பட்டன.

இந்த உணவு விநியோக ஏற்பாட்டை, “Hope Initiative Alliance” எனும் அறநிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனிதவள அமைச்சின் ACE பணிக்குழு, Inter-Religious Organisation, TSL Group, இந்து அறக்கட்டளை வாரியம், Free Food for All போன்றவை அந்த அறநிறுவனத்துடன் இணைந்து பணியாற்றின.

ஓடும் காரின் மேற்பகுதியில் படுத்துக்கொண்டு பயணம்…நெட்டிசன்கள் காட்டம்!

ஆசியான் உள்ளிட்ட நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…