சிங்கப்பூரில் தொடர்ந்து 5வது நாளாக சமூக தொற்று பரவல் இல்லை!

Singapore reports 3 new COVID-19
Singapore reports 3 new COVID-19 (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்றைய (நவம்பர் 15) நிலவரப்படி, 3 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

ஓடும் காரின் மேற்பகுதியில் படுத்துக்கொண்டு பயணம்…நெட்டிசன்கள் காட்டம்!

தனிமைப்படுத்தல்

இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,119ஆக உள்ளது.

சமூக பரவல் இல்லை

சிங்கப்பூரில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக சமூக பரவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

ஆசியான் உள்ளிட்ட நாடுகளில் பயணக் கட்டுப்பாடுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் லீ

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…