COVID-19 பற்றி கூறி மாணவர் மீது இனவெறி தாக்கு; சிங்கப்பூர் தூதரகம், UK அதிகாரிகளுடன் தொடர்பு…!

Singapore student assault sparked by COVID-19 comments
Singapore High Commission in contact with UK authorities on student assault sparked by COVID-19 comments (PHOTOS: JONATHAN MOK/FACEBOOK)

சிங்கப்பூர் மாணவர் ஜொனாதன் மோக்கின் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை உறுதி செய்வதற்காக லண்டன் போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளதாக சிங்கப்பூர் High Commission (மார்ச் 4) தெரிவித்துள்ளது.

மேலும், UK வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் மற்றும் உள்நாட்டு அலுவலகம் ஆகியவற்றுடன் தொடர்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

லண்டனில் நடந்த சம்பவத்தில், தனது இனம் மற்றும் COVID-19 பற்றி வழிப்போக்கர்கள் பேசியதாகவும், அதற்கு பின்னர் தாக்கப்பட்டதாகவும் 23 வயதான UCL மாணவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து சிங்கப்பூரர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என சிங்கப்பூர் தூதரகம் வலியுறுத்தி கூறியுள்ளது.

ஒவ்வொரு சமூகத்திலும் எப்போதும் வெறுக்கத்தக்க நடைமுறைகள் துரதிர்ஷ்டவசமாக அமையும், குறிப்பாக இதுபோன்ற பதட்டமான நேரங்களில் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் இருவருக்கு COVID -19 வைரஸ் தொற்று உறுதி..!