சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் – வேலை தேடுவோர் நிம்மதி!

சிங்கப்பூரில் தொடர்ந்து 4வது மாதமாக வேலையின்மை விகிதம் கடந்த பிப்ரவரி மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகரித்த வேலையின்மை விகிதம், பின்னர் நவம்பர் மாதம் முதல் குறைய தொடங்கியது.

சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு திரும்பும் ஊழியர்கள் – பெரும் மகிழ்ச்சி!

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 3.0 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் அந்த விகிதம் 3.2 சதவீதமாக இருந்ததாக மனிதவள அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு நிலைமை தொடர்ந்து முன்னேறி வருவதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்துள்ளார்.

அதே போல சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்களின் குடியுரிமை வேலையின்மை விகிதம் 4.3 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பிப்ரவரி மாத நிலவரப்பபடி, 85,900 சிங்கப்பூர் குடிமக்கள் உட்பட சுமார் 96,800 குடியிருப்பாளர்கள் வேலை இல்லாமல் இருந்தனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு, சிங்கப்பூரை நம்பி இருக்கும் பல்வேறு ஊழியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முன்னேற்றம் அவர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பொங்கோலில் உள்ள KFC உணவகத்தின் உரிமம் தற்காலிக ரத்து