சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

Singapore Jobs: சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த 2024 ஆம் ஆண்டு அந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது குறித்து போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் தங்கிய சிங்கப்பூர் PR… தகுதியை இழந்த விவரம்

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு முதல் பாதிக்குள் அது முழுமையாக மீட்சியடையும்.

OneAviation Careers வேலைவாய்ப்பு கண்காட்சி, சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

அதில் 1,700 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் திரு. சீ, விமானத் துறை வேலைவாய்ப்புகள் குறித்து தெரிவித்தார்.

சுமார் 40 நிறுவனங்கள் அதாவது, ஏர்பஸ், சாங்கி விமான நிலையக் குழு, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), ஜெட்ஸ்டார், லோட்டே டிராவல் ரீடெய்ல், ரோல்ஸ் ராய்ஸ் சிங்கப்பூர் மற்றும் எஸ்டி இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவங்கள் 1,700 பணியிடங்களுக்கான நேர்காணலை நடத்துகின்றன.

அந்நிகழ்வு நேற்று (ஆக. 4) முதல் இன்று (ஆக. 5) வரை சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

Singapore Jobs: 1,700 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்… 40 நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல் – ஆக. 4, 5 மட்டும்; முன்பதிவு செய்யலாம்

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களுக்கான பல திட்டங்கள்