சிங்கப்பூர்-மலேசியா எல்லை தாண்டிய பயணம்; ஆகஸ்ட் 10 முதல் தொடங்க இலக்கு..!

(PHOTO: Dhany Osman / Yahoo News Singapore)

சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய பயணத்தைத் தொடங்க இலக்காக ஆகஸ்ட் 10ஆம் தேதியை இருநாடுகளும் நிர்ணயித்துள்ளன.

சில குடியிருப்பாளர்களுக்கும் மற்றும் வணிக நோக்கங்களுக்கான பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் “பொதுத்தேர்தல் முடிந்துவிட்டது, பிற அவசர சவால்களை சமாளிக்க கவனம் செலுத்தலாம்” – பிரதமர் லீ..!

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் மலேசியாவின் ஹிஷாமுதீன் ஹுசைன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.

அதாவது இரு நாடுகளும் Reciprocal Green Lane மற்றும் Periodic Commuting Arrangement ஆகிய இரு முறைகளில் பயணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

அதாவது அத்தியாவசிய வர்த்தக பயணத்திற்கும் மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக எல்லை தாண்டிய பயணத்திற்கும் இந்த Reciprocal Green Lane உதவும்.

மேலும் Periodic Commuting Arrangement குறிப்பிட்ட காலத்துக்குப் பயணம் செய்வதற்கு உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தகுதியுடைய பயணிகள் இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட நடைமுறையில் உள்ள COVID-19 தடுப்பு மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

குறைந்தது தொடர்ந்து மூன்று மாதங்கள் தங்கள் வேலை முடிந்த பின்னர் விடுப்புக்காக தங்கள் நாட்டிற்கு திரும்ப முடியும், மேலும் விடுப்புக்குப் பிறகு மீண்டும் வேலைசெய்யும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து 12 வெளிநாட்டினர் நாடு கடத்தல் – மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய தடை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg