குறைந்த வருமான ஊழியர்களுக்கான ஆதரவு திட்டம்; நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளிடையே வாக்குவாதம்.!

Singapore minimum wage
Photo: GOV.SG

மக்கள் செயல் கட்சி மற்றும் பாட்டாளிக் கட்சி குறைந்த வருமான ஊழியர்களுக்கான சிறந்த ஆதரவுத் திட்டம் குறித்து நேற்று (15-10-2020) மீண்டும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில்
வாக்குவாதத்தில் ஈடுபட்டன.

குறைந்தபட்சச் சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பட்டாளிக் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. மக்கள் செயல் கட்சியானது படிப்படியாக உயரும் சம்பளத் திட்டத்தை பின்பற்றுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் குறைந்தபட்ச ஊதியமாக S$1,300 வழங்கப்பட வேண்டும் – எதிர்கட்சி தலைவர்.!

பட்டாளிக் கட்சியின் தலைவர் பிரித்தம் சிங், குறைந்தபட்ச மாத சம்பளமாக S$1300 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.

இந்த தொகை, உண்மை நிலவரத்துக்கேற்ப கணக்கிடப்பட்ட தொகைதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு சராசரி குடும்பம் செலவிடும் தொகையை ஆதாரமாக கொண்டுதான் குறைந்தபட்ச சம்பளத்தை பாட்டாளிக் கட்சி பரிந்துரைக்கிறது என அவர் கூறினார்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு – மேலும் ஒரு குழுமம் மூடல்..!

பட்டாளளிக் கட்சி தலைவர் பிரித்தம் சிங்கின் பரிந்துரை குறித்து சுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் (Koh Poh Koon) கருத்துரைத்தார்.

மேலும், தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளர், எல்லா துறைகளிலும் அமல்படுத்தக்கூடிய, குறிப்பிட்ட ஒரு தொகையை நிர்ணயிப்பதில் உள்ள சவால்களை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இதையும் படிங்க: புதிதாக வெளியாகியுள்ள iPhone 12 pro வாங்க சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் எவ்வளவு நாட்கள் சராசரியாக வேலைக்கு செல்ல வேண்டும்..?

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…