சிங்கப்பூரின் இந்த ஆண்டிற்கான பொருளாதார கணிப்பு 5 முதல் 7 சதவிகிதம் வரை சுருங்கும்..!

Singapore narrows 2020 GDP forecast range as economy sees record quarterly slump in Q2
(Photo : Reuters)

சிங்கப்பூரின் இந்த ஆண்டிற்கான பொருளாதார கணிப்பு 5 முதல் 7 சதவிகிதம் வரை சுருக்கியுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தெரிவித்துள்ளது.

இரண்டாவது காலாண்டில், COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரம் மோசமான செயல்திறனைப் பதிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் நான்கு தங்கும் விடுதிகள் கிருமித்தொற்று குழுமம் பட்டியலில் இருந்து நீக்கம்..!

மே மாதத்தில் பொருளாதாரம் 4 முதல் 7 சதவீதம் வரை சுருங்க வேண்டும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. அப்போதிருந்து, சிங்கப்பூர் பொருளாதாரம் சற்று பலவீனமடைந்துள்ளது என்று MTI தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

COVID-19 காரணமாக நிச்சயமற்ற நிலைமை வரவிருக்கும் காலாண்டுகளில் உருவாகும் என்பதால், அதற்கேற்ப உலக மற்றும் உள்நாட்டு பொருளாதாரங்களில் பாதிப்பு இருக்கும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாம் காலாண்டில் பொருளாதார தடைகள் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில், சந்தை நிலவரம் படிப்படியாக வளர்ச்சியை சந்திக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அனைத்து தங்கும் விடுதிகளிலும் கிருமித்தொற்று சோதனை முடிவு – 23,300 பேர் தனிமை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg