‘சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டிகளைக் காண அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்’- சிங்கப்பூர் கால்பந்து சங்கம் அறிவிப்பு!

Photo: Singapore Premier League Official Facebook Page

சிங்கப்பூர் பிரீமியர் லீக் (Singapore Premier League- ‘SPL’) கால்பந்துப் போட்டிகளைக் காண இன்று (18/03/2022) முதல் அதிகமான ரசிகர்கள் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று சிங்கப்பூர் கால்பந்து சங்கம் (Football Association of Singapore- ‘FAS’) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிங்கப்பூரை நாளைக்கு பாருங்க…நீல மின்னொளியில் ஜொலிக்க போகும் கட்டடங்கள் – இதுதான் விஷயம்மா..?

இது தொடர்பான அறிவிப்பில், “நிகழ்வுகளில் பங்கேற்கும் பார்வையாளர்களுக்கான வரம்புகளை அரசாங்கம் நீக்கியதால், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைமுறைக்கு வந்த எளிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான கோவிட்- 19 தடுப்பு மேலாண்மை நடவடிக்கைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவர்.

அதன்படி, சிங்கப்பூர் பிரிமீயர் லீக் ஐந்து இடங்களில் நடைபெறுகிறது. இதில் எத்தனை ரசிகர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என்பது குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஜாலான் பெசார் ஸ்டேடியத்தில் 3,000 பேர் வரையும் (Jalan Besar Stadium), தெம்பனீஸ் அரங்கத்தில் 2,500 பேர் வரையும் (Our Tampines Hub), தோவா பயோ ஸ்டேடியம் (Toa Payoh Stadium), ஹவ்ஹாங் ஸ்டேடியம் (Hougang Stadium), ஜூரோங் ஈஸ்ட் ஸ்டேடியம் (Jurong East Stadium) ஆகிய மூன்று ஸ்டேடியங்களில் தலா 1,500 பேர் வரை அனுமதிக்கப்படுவர்.

சண்டையின் போது கத்தியை சுழற்றி அச்சுறுத்திய ஆடவர் – கைது செய்த போலீஸ்!

சமூக இடைவெளி பின்பற்றத் தேவையில்லை என்றாலும், பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; முழுமையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

12 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய குழந்தைகள் தடுப்பூசியின் நிலைக் குறித்து கேட்கப்பட மாட்டாது. எனினும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவர்களுடன் ஸ்டேடியத்திற்குள் உள்ளே நுழைய குழந்தைகள் அனுமதிக்கப்படுவர்.

குறிப்பிட்ட டிக்கெட் விவரங்களுக்கு அந்தந்த ஹோம் கிளப்களில் (Home Clubs) பார்க்கும்படி ரசிகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மைதானங்களுக்குள் நுழையும் ரசிகர்கள் வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் அவர்களுடைய பைகளை சோதனையிடுவது (Bag Checks) போன்றவை அடங்கும். எனவே, போட்டியை காண வரும் ரசிகர்கள் பைகள் மற்றும் தடைச் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட 40 இடங்களுக்கு அதிரடி சலுகை கட்டணம் – SIA அசத்தல் அறிவிப்பு!

உணவு மற்றும் பானங்கள் மைதானங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. இசைக்கருவிகள் (Musical Instruments) மற்றும் பதாகைகள் (Banners), கொடிகள் (Flags) உள்ளிட்டவை மைதானத்தின் நுழைவு வாயிலில் ஒப்புதலுக்கு உட்படுத்தப்படும். பாதுகாப்பு அல்லது ஒழுங்குமுறை நடவடிக்கைளை ரசிகர்கள் மீறக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.