குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பது அவசியம் – அதிபர் ஹலிமா யாக்கோப்.!

Singapore president visit feiyue
Pic: File/Today

சிங்கப்பூரில் கிருமித்தொற்று பரவும் சூழ்நிலையில், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது அவசியம் என அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

Fei Yue குடும்பச் சேவை நிலையத்திற்கு சென்றிருந்த அதிபர் ஹலிமா யாக்கோப்,
அடுத்த ஆண்டின் அதிபர் சவால் அறநிதிக்கான கருப்பொருளை அறிவித்தார். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை ஆதரித்தல் எனும் கருப்பொருளில் அது நடைபெறும் என‌ அவர் தெரிவித்தார்.

ஆபத்தான லாரி பயணங்கள், வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாற்று வழிகள்..!

கிருமித்தொற்று பரவும் சூழலில் இருந்து வசதி குறைந்த குடும்பங்கள் வலுவாக மீண்டு வர அது உதவும் என்றும், இலக்குகளை அடைய அவர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்குவதும் அதன் நோக்கமாக இருக்கும் என்றும் கூறினார்.

மேலும், அதிக அனுகூலங்கள் இல்லாத பின்னணியைச் சேர்ந்த குழுந்தைகள், கிருமித்தொற்று பரவும் சூழலில் இருந்து கடுமையாக பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியமானது என்றார்.

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களே கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிய அதிபர் ஹலிமா யாக்கோப், சிறந்த வேலை வாய்ப்புகளை பெற திறன் மேம்பாட்டுக்கு உதவி வழங்குவதன் மூலம் அது சாத்தியமாகும் என்றும், வளங்கள் அவர்களை எளிதில் சென்று சேர்வதை உறுதிசெய்வதும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Boon Lay Place Food Village இரண்டு வாரங்களுக்கு மூடல் – MOH