சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கை – S$170,000 ரொக்கம் பறிமுதல்… 7 பேர் கைது!

Singapore remote gambling arrested
S$170,000 in cash seized, 7 arrested on remote gambling activities (Photo: Singapore Police Force)

தொலைத்தொடர்பு வழி சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை இன்று (டிசம்பர் 14) தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் குற்றப் புலனாய்வுத் துறை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.

TraceTogether செயலி: பயன்படுத்துவோர் 60%.. பேட்டரி விரைவில் குறைவதாக சிலர் தயக்கம்!

அந்த சோதனை நடவடிக்கையில், 43 முதல் 71 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 74 மற்றும் 75 வயதுடைய இரண்டு ஆண்களும் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

அவர்கள் ஒன்பது பேரும் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு முகவராக செயல்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும், தொலைத்தொடர்பு வழி சூதாட்ட சட்டம் 2014இன் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் S$170,000க்கும் அதிகமான ரொக்கத்தையும் சூதாட்டம் தொடர்பான சாதனங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இது தொடர்பான காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

உமிழ்நீரைப் பயன்படுத்தி புதிய சோதனை முறை.. சிங்கப்பூர் அசத்தல்!

இந்தியாவில் இருந்து வந்த Work pass, Work permit கீழ் பணிபுரிவோருக்கு புதிதாக தொற்று!

பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…