TraceTogether செயலி: பயன்படுத்துவோர் 60%.. பேட்டரி விரைவில் குறைவதாக சிலர் தயக்கம்!

TraceTogether returned
(PHOTO: Online Citizen Asia)

Trace Together செயலி மற்றும் சாதனங்களை சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர் என்ற தகவல் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளது.

கிருமிப்பரவல் தொடர்பாக, சிங்கப்பூர் 3ஆம் கட்டத்திற்கு செல்லும் நிலையில் அது 70 சதவீத இலக்கை அடையவேண்டும்.

உமிழ்நீரைப் பயன்படுத்தி புதிய சோதனை முறை.. சிங்கப்பூர் அசத்தல்!

ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசாங்க குழு (SNDGG) 60 சதவீத குறைந்த எண்ணிக்கையை பற்றி கூறியுள்ளது, ஆனால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அது வழங்கவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட YouGov கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை தெரியவந்தது.

இதில் 23 சதவீத மக்கள் இன்னும் செயலியை பதிவிறக்கம் செய்யவில்லை.

மேலும், 11 சதவீதம் பேர் அதை பதிவிறக்கம் செய்ததாகவும் ஆனால் பின்னர் அதை நீக்கியதாகவும் கண்டறியப்பட்டது.

TraceTogether செயலி குறித்த தனிப்பட்ட தகவல்கள் குறித்த கவலைகள் குறைந்தாலும், செயலியைப் பயன்படுத்துவதால் மொபைல் ஃபோன்களில் பேட்டரி விரைவில் குறைவதாக ஏற்படும் கவலைகள் காரணமாக சிலர் அதை பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து வந்த Work pass, Work permit கீழ் பணிபுரிவோருக்கு புதிதாக தொற்று!

பணிப்பெண்ணை கொலை செய்த வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…