சிங்கப்பூரில் ஒரே நாளில் 13 சம்பவங்கள் உறுதி; சிங்டெல் ஊழியர் ஒருவர் இதில் பாதிப்பு..!

Singapore reports 13 new COVID-19 cases
Singapore reports 13 new COVID-19 cases in largest single-day spike (Photo: SAFRA Jurong)

சிங்கப்பூர் COVID-19 தொற்று பாதித்த, 13 புதிய சம்பவங்களை (மார்ச் 6) அறிவித்துள்ளது, இந்த எண்ணிக்கையானது நோய்தொற்று பரவ தொடங்கியதில் இருந்து அதிகபட்ச தினசரி எண்ணிக்கை ஆகும்.

கடந்த ஜனவரி 23ஆம் தேதி அன்று முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டதிலிருந்து, சிங்கப்பூரில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 130ஆக உள்ளது.

இதையும் படிங்க : COVID-19; சிங்கப்பூரில் நிலப் போக்குவரத்துச் சேவை கடுமையாகப் பாதிப்பு..!

குணமடைந்தோர்

மேலும் ஒரு நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இதன் மூலம் குணமடைந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 82ஆக உள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், ஒன்பது பேருக்கு புதிய தொற்று பரவும் இடமாக கண்டறியப்பட்ட, சாஃப்ரா (SAFRA) ஜூரோங் உடன் தொடர்புள்ளது.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் சிங்டெல் ஊழியர் ஆவார்.

வெளிநாட்டில் இருந்து வந்த, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கேபின் குழு உறுப்பினர் ஒருவர் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டாவது பாதிக்கப்பட்ட நபர், சிங்கப்பூர் நிரந்தரவாசி. இவர் சமீபத்தில் ஜெர்மனி சென்றிருந்தார்.

மற்றொரு சம்பவம் முன்னர் கண்டறியப்பட்ட நபருடன் அதே வார்டில் இருந்தவர்.

மருத்துவமனையில் உள்ளோர்

இன்னும் மருத்துவமனையில் உள்ள உறுதிப்படுத்தப்பட்ட 48 நபர்களில், பெரும்பாலானவை சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் ஒன்பது பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Source : CNA

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பொது நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்களுக்கு இலவச அனுமதி..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil