COVID-19: சிங்கப்பூரில் மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!

Singapore reports 447 new COVID-19 cases
Singapore reports 447 new COVID-19 cases (Photo: Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூரில் நேற்றைய (மே 2) நிலவரப்படி, புதிதாக 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 17,548ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 தொற்றால் சிங்கப்பூரில் மேலும் ஒருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 10 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் நான்கு பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள், மற்றும் இரண்டு பேர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரில் 93 சதவீதம், முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவர்கள். எஞ்சியோர், தொடர்புகள் கண்டறியும் பணி நிலுவையில் உள்ளது.

புதிய குழுமங்கள்

மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது.

  • 5 Neythal Road
  • 34 Sungei Kadut Loop
  • 16 Tuas Avenue 3
  • 21 Tuas View Square
  • 2 Tuas South Street 2

இதையும் படிங்க : எச்சரிக்கை பதிவு: சிங்கப்பூரில் தொலைபேசியின் மூலம் பண மோசடி..!